இன்று தூத்துக்குடி செல்லும் முதல்வர் இதுகுறித்து உத்தரவிடுவாரா? – கனிமொழி

இன்று தூத்துக்குடி செல்லும் முதல்வர் இதுகுறித்து உத்தரவிடுவாரா?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய் வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், திமுக எம்.பி.கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினர், எங்கள் கவ்வி தகுதிக்கேற்ற அரசு பணி வழங்குங்கள் என்று தொடர்ந்து கோரி வருகின்றனர். அரசு தான் செவிசாய்க்க மறுக்கிறது. இன்று தூத்துக்குடி செல்லும் முதல்வர் இதுகுறித்து உத்தரவிடுவாரா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.