வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா தமிழக முதல்வர்.? – இபிஎஸ் கேள்வி.!

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு முறை பயணமாக கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி ஸ்பெயின் சென்றார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி விட்டு கடந்த பிப்ரவரி 7ம் தேதி தமிழகம் வந்தடைந்தார்.

அதிமுகதான் ஜனநாயகக் கட்சி; திமுக வாரிசுக் கட்சி – ஈபிஎஸ்..!

தற்போது எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக கட்சியின் பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், திமுக பொறுப்பேற்றது முதல் இந்த இரண்டரை வருடங்கள் எத்தனை கோடி முதலீடு ஈர்த்துள்ளார் எனவும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் மூலமாகவும், முதலீட்டார்களின்  மாநாடு மூலமாகவும் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவாரா ? என்று கேள்வியை அறிக்கை எழுப்பி உள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட உலக முதலீடு மாநாட்டிருக்கு வந்தவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக கோட்சூட் அணிந்தவர்களை அழைத்து உக்கார வைத்து உலக முதலீட்டு மாநாட்டை நடத்தியாதக விமர்சித்த அப்போதய எதிர் கட்சி தலைவராக இருந்து ஸ்டாலின் விமரசித்ததையும் தனது அறிக்கையில் சுட்டி காட்டியிருக்கிறார், ஈபிஎஸ்.

இதே போல் தொழில் முனைவோடு இருப்பவர்களை நாங்கள் கொச்சைப்படுத்த மாட்டோம் , தொழில் முதலீடுகள் தொழில் வளர்ச்சி என்பது ஒரு தொடர் நடவடிக்கை தான் அதை அதிமுக ஆட்சியில் நன்றாகவே நாங்கள் செய்திருக்கிறோம் என்று அதையும் அறிக்கையில் சுட்டி காட்டிருக்கிறார்.

மேலும்,  2030 ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர்களை முதலீடாக கொண்டு வருவேன் என்று தமிழக அரசு இலக்கு  நிர்ணயித்திருக்கிறது. அந்த இலக்குக்கான வரைவு அறிக்கையும் இன்னும் வெளியிடவில்லை என்றும்,  20 ஆண்டிற்கு முன்னர் தான் சென்னையில் உலக முதலீட்டார்கள் மாநாடு நடைபெற்றது.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஸ்பெயின் நாட்டிற்கு முதலீடுகள் ஈர்ப்பதற்கான அவசியம் என்ன ? இந்த முதலீட்டார்கள் மாநாடு நடைபெறும் போது ஸ்பெயின் நாட்டில் உள்ள முதலீட்டார்களையும் அழைத்திருக்கலாமே என்றும் அந்த அறிக்கையில் இபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.

அதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இது குறித்தான விளக்கங்களையும், முதலீட்டு மாநாடு குறித்த விளக்கங்களையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்