காவல் நிலையத்தில் ஏற்பட்ட லாக்அப் மரணத்தின் மர்மத்தை முதல்வர் விளக்குவாரா? என ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை
காவல் நிலையத்தில் ஏற்பட்ட லாக்அப் மரணத்தின் மர்மத்தை முதல்வர் விளக்குவாரா? என கேள்வி எழுப்பி, ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், ‘சென்னை, புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் பகுதியில் 19.4.2022 அன்று இரவு நடைபெற்ற வாகன தணிக்கை சோதனையில், ஆட்டோவில் பயணித்த விக்ணேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் சோதனை செய்த போலிசார் அவர்கள் இருவரிடமும் கஞ்சா, கத்தி ஆகியவை இருந்ததாகவும் விசாரணைக்காக தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணையின் போது, அப்போது காவலர்கள் தாக்கியதால் விக்ணேஷ் வலிப்பு வந்து இறந்து போனதாகவும் காவல் துறையின் தரப்புல் சொல்லப்படுகிறது. இந்நிகழ்வின் போது ஒரு எஸ்.ஐ. ஒரு காவலர் மற்றும் ஊர்காவல்படை காவலர் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர் விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் காவலர் தாக்குதலால் கொல்லப்பட்ட விக்னேஷ் குடும்பத்தாரிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் விக்னேஷ் அவரது சகோதரர் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்துள்ளார்.
காவலர் தாக்குதலில் இறந்த திரு. விக்னேஷ் சென்னை கடற்கரையில் வயிற்றுப் பிழைப்புக்காக சுற்றுலா பயணிகளுக்கு குதிரை சவாரி செய்ய வைத்து வாழ்க்கை நடத்தி வரும் ஒரு சாதாரான ஏழைத் தொழிலாளி. அவர்களது குடும்பமே வறுமையில் வாடி வருகிறது. பெற்றோரும் இல்லாத நிலை.
அவர்கள் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவர்களை விசாரித்து, வழக்கு பதிவு செய்து முறைப்படி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். இது காவல்துறையினரின் கடமை. ஆனால் அவ்வாறு செய்யாமல், விக்னேஷ் காவல்நிலையத்தில் காவலர்களினால் தாக்கப்பட்டு, மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அம்மாவின் ஆட்சி காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்ற போது நாங்களே இதனை முதலில் சிபிசிஐடி வசமும், பிறகு அதனை சிபிஐ வசம் மாற்றினோம்.
காவலர் தாக்குதலில் இறந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், மேலும் இவ்வழக்கை சிபிஜ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த அரசை வலியுறுத்துகிறோம்.
மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…