அதிமுக அவைத்தலைவர் மாற்றமா ? மதுசூதனன் விளக்கம்

அவைத் தலைவர் பதவியில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது.அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு நாளை (அக்டோபர் 7-ஆம் தேதி ) முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் அவைத் தலைவர் பதவியில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். அவைத் தலைவர் பதவியில் இருந்து நான் மாற்றப்படுவதாக வெளியான தகவல் தவறு என்றும் மதுசூதனன் சாகும் வரை அவர்தான் அவைத் தலைவர் என ஜெயலலிதாவே கூறியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025