தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா ? முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை

Default Image

இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் வந்த நிலையில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கு நீட்டிப்பதற்கு முன்பாக முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு ,அதன் பின்னர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

எனவே இன்று (ஜூன் 29ஆம் தேதி) மருத்துவ நிபுணர் குழுவுடன், முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.நாளையுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரும் நிலையில் ஆலோசனை  மேற்கொள்ள உள்ளார் .இந்த ஆலோசனைக்கு பின்னர் தான் தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா ? இல்லையா ? என்பது தெரியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்