50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி: சென்னையில் நடக்கும் போட்டிகளை காண அனுமதியா?
தமிழகத்தில் கிரிக்கெட் உட்பட போட்டிகளை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சென்னையில் நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிகளை காண அனுமதி வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடனான ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் புதிய தளர்வுகளுடன் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கிரிக்கெட் உட்பட அனைத்து போட்டிகளையும் காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரையிலும், 2 வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
தற்பொழுது தமிழக அரசு கிரிக்கெட் போட்டிகளை காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், கொரோனா பரவல் காரணமாக சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் ரசிகர்களின்றி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகளை காண அனுமதி வழங்கப்படுமா என்ற குழப்பம் நிலவுகிறது.