தமிழ்நாடு

சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா? மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில்!

Published by
பாலா கலியமூர்த்தி

சுந்தரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா (வயது 102) நேற்று முன்தினம் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்தியாவின் விடுதலைக்கும், இந்திய அரசியலிலும் முக்கிய பங்காற்றிய மூத்த அரசியல் தலைவர் சங்கரய்யாவின் மறைவுக்கு பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர்.

சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றும், மூன்று முறை எம்.எல்.ஏவாகவும் தமிழகத்திற்கு அவர் ஆற்றிய தொண்டையும் போற்றும் வகையில், சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் தோழர் என்.சங்கரய்யாவின் உருவப் படத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவரிடம் அரசியலிலும், சுதந்திர போராட்டத்திலும் பெரும் பங்காற்றிய சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா? என செய்தியார்கள் கேள்வி எழுப்பினர்.

பிரதமர் மோடியை பதற வைத்த AI – DeepFake டெக்னலாஜி.! விவரம் இதோ…

இதற்கு அவர் கூறுகையில், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து அவரது குடும்பத்துடன் இணைந்து என்ன சாத்தியமோ அதற்கான நடவடிக்கை எடுப்போம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதிலளித்தார்.

இதனிடையே பேசிய அமைச்சர் எல்.முருகன், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொழிலை முடக்குவது தான், அவர்களின் குறிக்கோளாக உள்ளது. மின்சார கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டணம் உயர்வால் பல தொழில் நிறுவனங்கள் மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

என் வீட்டில் 3,000 ரூபாய் வந்த கரண்ட் பில் இப்போ 10,000 ரூபாய் வருது. ஏழை மக்கள் வீட்டில் 300 ரூபாய் 3000 ரூயாய் ஆகிவிட்டது என தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், தமிழக சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான வேலை நடக்கவில்லை. சட்டமன்றத்தில் இளவரசர் பட்டத்தரசர் அல்லது போலி திராவிட மாடலை துதி பாடுவது தான் நடக்கிறது என விமர்சித்தார்.

மேலும், காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தது அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோகித் தான். அப்போது காலை உணவுத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கி நகராட்சிக்கு அனுப்பி வைத்தது அவர்தான். இப்போது ஸ்டிக்கர் ஒட்டி திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, ஸ்டிக்கர் ஓட்டும் வேலையை விட்டுவிட்டு, எதாவது ஆக்கபூர்வமான வேலை செய்ய வேண்டும் எனவும் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

1 hour ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

2 hours ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

3 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

4 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

5 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

6 hours ago