சசிகலா வருகை அதிமுக-பாஜக கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?- எல் முருகன் பதில்
சசிகலா தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவித்த பின்னர் நான் கருத்து கூறுகிறேன் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், சசிகலா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வந்துள்ளார். அரசியல் நிலைப்பாடு குறித்து சசிகலா அறிவித்த பின்னரே அதிமுக கூட்டணியில் எந்த மாதிரியான தாக்கம் இருக்கும் என்பதை கூற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சியில் எல்லாருக்கும் வரவேற்பு கொடுப்பது வழக்கம்தான். இது ஒன்னும் புதிதல்ல, அதேநேரத்தில் சசிகலா தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவித்த பின்னர் நான் கருத்து கூறுகிறேன் என சசிகலாவுக்கு அவர்கள் ஆதரவாளர்கள் அளித்த வரவேற்பு குறித்த கேள்விக்கு எல் முருகன் பதிலளித்துள்ளார்.