ரஜினி, கமல், விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதால் திமுகவிற்கு பலவீனமா? திருச்சி சிவா கருத்து
ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் திமுகவிற்கு பலவீனம் கிடையாது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் வைத்தவர்களை கைது செய்யாமல் லாரி ஓட்டுனர்களையும்,அச்சடித்தவர்களையும் கைது செய்வதாக குற்றம் சாட்டினார்.மேலும் யாரை எங்கு உட்கார வைக்கணுமோ… அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும் என்று பேசினார்.
இந்த நிலையில் விஜய் கருத்து குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா கூறுகையில்,நடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் .ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் திமுகவிற்கு பலவீனம் கிடையாது .நடிகர் விஜய் அவர் விருப்பப்பட்டதையும், பேசத் தோன்றியதையும் கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் ஆங்கிலம் மட்டுமே இணைப்பு மொழியாக வர முடியுமே தவிர, இந்தியாவில் உள்ள எந்த மொழியும் பொதுமொழியாக வர முடியாது என்றும் தெரிவித்துள்ளர்.
ஏற்கனவே கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் ரஜினி மற்றும் விஜய் அரசியல் குறித்த உறுதியான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.