எவ்வளவு தொகை கொடுத்தாலும் பிரியாவின் உயிர் திரும்பி வருமா? – விஜயகாந்த்
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்.
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு, வலது கால் முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது வலது கால் அகற்றப்பட்ட நிலையில், அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பாக 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும், வரும் காலங்களில் அரசு மருத்துவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அரசு மருத்துவர்களை தமிழக அரசு வழிநடத்தி செல்ல வேண்டும். பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசு மருத்துவர்களை தமிழக அரசு வழிநடத்தி செல்ல வேண்டும். பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.(2-2) pic.twitter.com/U7RUQ8Uvvx
— Vijayakant (@iVijayakant) November 15, 2022