“பாஜக ஆட்சியமைக்க மக்கள் வாய்ப்பு அளிப்பார்களா?”- அமைச்சர் ஜெயக்குமார்

பாஜக ஆட்சியமைக்கும் என சிலர் பேசி வருவதாகவும், ஆனால் அதற்கு மக்கள் வாய்ப்பளிப்பார்களா என்பதை யோசிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கொத்தவச்சாவடியில் உள்ள துறைமுக பகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், வளர்ந்த மாவட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி கூறியதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
மேலும், கடனை வட்டியுடன் செலுத்துகின்ற மாவட்டம் தமிழகம் தான் என கூறிய அவர், ரிசர்வ் வாங்கி எப்பொழுதும் போல தமிழகத்திற்கு நிதி வழங்கவேண்டும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, பாஜகவும் ஆட்சி அமைக்கும் என விருப்பமாக சிலர் பேசுகின்றனர். ஆனால் மக்கள் வாய்ப்பு அளிப்பார்களா என்பதை யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025