திமுகவின் “இதயங்களை இணைப்போம்” மாநாட்டில் அசாதுதீன் ஓவைசி பங்கேற்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 6-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதயங்களை இணைப்போம் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், திமுக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது.ஆகவே திமுக நடத்தும் இதயங்களை இணைப்போம் மாநாட்டுக்கு AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.இந்நிலையில் இதற்கு திமுக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச்செயலாளர் மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பில் எங்கள் கழகத் தலைவரை வைத்து பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கமான ஒன்று. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு அப்படியொரு கூட்டம், வருகின்ற 6.1.2021 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கழகத் தலைவர் அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது.இந்தப் பொதுக்கூட்டத்திற்கு எப்போதும் போல் தி.மு.க.வின் தோழமை கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி தொலைக்காட்சிகளில் வருவது போன்ற செய்தி உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…