போராட்டத்தை நிறுத்த மாட்டேன் – கமல்ஹாசன்

- குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
- எனது போராட்டத்தை நிறுத்த மாட்டேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் இதற்கு மத்தியில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல இடங்களில் போராட்டம் வெடித்து வருகின்றது.
High time, they realise that majority in Parliament doesn’t give them authority to destroy the fabric of my nation. After CAA, their next brainchild is NRC. You cannot deny one’s ancestry based on documentary evidence or lack of it. My fight won’t stop till this tyranny goes off.
— Kamal Haasan (@ikamalhaasan) December 21, 2019
இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், நாட்டின் பாரம்பரியத்தை அழிப்பதற்கு அதிகாரமில்லை.எனது போராட்டத்தை நிறுத்த மாட்டேன். அதிகாரம் மக்களின் கையில் இருக்கும் வரையில் தான் அது ஜனநாயகம். மக்களுக்கு எதிராக செல்லும் இந்த தனிநாயகத்தை ஒழிக்கும் வரையில் நான் ஓய மாட்டேன் . நாம் யாருமே ஓயக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.