மே 2-ஆம் தேதிக்கு பின்னர் புதிய படத்தில் நடக்க தொடங்குவார் அல்லது அடுத்த பிக்பஸ்ஸில் வர தொடங்குவார்..? என வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக போட்டியிடவுள்ளனர். இதனால், கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இன்று வானதி சீனிவாசன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, வானதி சீனிவாசன் கடந்த முறை நான் இங்கு தோல்வி அடைந்து இருந்தாலும், மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்த்து இருக்கின்றேன். டிவி ஸ்கிரீனில் தினமும் வந்துட ஒட்டு கிடைக்காது. அதனால், மரியாதைக்குரிய அன்பு சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் மீண்டும் விரைவில் ஏப்ரல் 6 அல்ல மே 2-ஆம் தேதிக்கு பின்னர் புதிய படத்தில் நடக்க தொடங்குவார் அல்லது அடுத்த பிக்பஸ்ஸில் வர தொடங்குவார்..? என விமர்சனம் செய்துள்ளார்.
வருகின்ற சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி கடுமையான போட்டி நிலவும் தொகுதியாக மாறியுள்ளது. காரணம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசனும், காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமாரும், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…