மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா?24 ஆம் தேதி அறிவிப்பேன்-கமல்ஹாசன்
- தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் அறிவித்தார். அதேபோல் மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களை அறிவித்தனர்.
எனவே 2019 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.முதற்கட்டமாக 21 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார்.அதேபோல் ட்பாளர் பட்டியல் 24-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
இதன் பின்னர் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசன் கூறுகையில், திமுக, அதிமுக கட்சிகள் திராவிடம் என்ற பெயரை சொந்தம் கொண்டாட விடமாட்டோம்.பணம் சம்பாதிக்க எண்ணம் இல்லாத, சமூக பணியில் ஆர்வம் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் 21 தொகுதிக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.