ஒன்றிய அமைச்சரவையில் உள்ள 33 அமைச்சர்களை நீக்கச் சொல்லி பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதுவாரா? – திமுக எம்.பி.வில்சன்
முதலமைச்சரின் நேரத்தை வீணடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என திமுக எம்.பி. வில்சன் காட்டமான கருத்து.
செந்தில் பாலாஜி மீது ஊழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில் அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் எழுதிய கடிதம் தொடர்பாக திமுக எம்.பி. வில்சன் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காலையில் ஒரு கடிதம் எழுதுவீர்கள், இரவில் அதை வேண்டாம் என கூறுவீர்கள். முதலமைச்சரின் நேரத்தை வீணடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
வழக்குகளை எதிர்கொள்பவர்கள் அமைச்சரவையில் நீடிக்கக் கூடாது என்றால், ஒன்றிய அமைச்சரவையில் உள்ள 33 அமைச்சர்களை நீக்கச் சொல்லி பிரதமர்
மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதுவாரா? செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் எழுதிய கடிதம் தமிழ்நாடு அரசை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என தெரிவித்துள்ளார்.