7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தமிழக ஆளுநர் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் ஒருவாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் முடிவுற்ற நிலையில், இதுதுகுறித்து ஆளுநர் நல்ல முடிவை இப்போதாவது எடுக்க வேண்டும் என்று கட்சியின் சார்பில் வலியுறுத்திக்கிறோம்.
தனக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள தனிப்பெரும் அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, உச்சநீதிமன்ற காலக்கெடு என்ன ஆனது? ஆளுநரின் ஒப்புதல் எப்போது? இன்று நள்ளிரவுக்குள் நல்ல முடிவு வெளியாகுமா? என்று கேள்விகளையும் எழுப்பி பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…