இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்வாரா இபிஎஸ்? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை.
அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த உத்தரவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தொடர்வாரா? என தெரியவரும்.
கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் வைரமுத்துவின் கோரிக்கையை ஏற்று பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை இன்று உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.