இபிஎஸ், ஓபிஎஸ் பாஜக கூட்டணியை விட்டு வெளியேருவோம் என்று அறிவிப்பார்களா? -ப.சிதம்பரம் கேள்வி

Default Image

அதிமுக – பாஜக கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ப.சிதம்பரம் வேண்டுகோள்.

ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா வெளிநடப்பு செய்திருந்தது. 13வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் மாகாண கவின்சில்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்த இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்தியிருந்தது.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்ததை, தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து, மத்திய பாஜக தமிழுக்கும், தமிழர்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை விளைத்து விட்டது என்று தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது. இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம் என தெரிவித்திருந்தார்.

இந்த செயல் ஒன்றே போதும், அதிமுக – பாஜக கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பச்சைத் துரோகத்திற்கு தகுந்த தண்டனையைத் தமிழ்நாடு தரவேண்டும் என பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் பாஜக அரசு வாக்களிக்காததைக் கண்டித்து இபிஎஸ், ஓபிஎஸ் பாஜக கூட்டணியை விட்டு வெளியேருவோம் என்று அறிவிப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்