தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாவதாக அக்கட்சியின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் தாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காத காரணத்தினால் கூட்டணியில் இருந்து விலகியது. அதனைதொடர்ந்து அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உறுதிப்படுத்தினார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், எப்போது வேண்டுமானாலும் கூட்டணி இறுதி செய்யப்படலாம் என தெரிவித்தார். இதனால் விரைவில் அமமுக- தேமுதிகவுடன் கூட்டணி உறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தையை நிறுத்தியது. இதனால் தனித்து போட்டியிடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், தற்பொழுது அமமுக அதன் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இதில் 200-க்கும் அதிகமான தொகுதிகளுக்குகாண வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால், தேமுதிக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாவதாக அக்கட்சியின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் தேமுதிகவின் அடுத்தகட்ட நகர்வு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…