அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா? தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் அதிருப்தி.!

Published by
பாலா கலியமூர்த்தி

வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்த்த தொகுதி கிடைக்காததால் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி உள்ளிட்டோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார்கள். அப்போது, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கியுள்ளோம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

தேமுதிகவுக்கு தொகுதி எண்ணிக்கை குறைவாக இருந்ததால், அந்த சமயம் பேச்சுவார்த்தையை தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மீண்டும் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. தேமுதிக சார்பில் துணை செயலாளர் பார்த்தசாரதி, அவை தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மனோகர் ஆகியோர் நேற்று அமைச்சர் வேலுமணியை சந்தித்து பேசியுள்ளார்கள்.

அப்போதும் 12 தொகுதிகளில் இருந்து 13 வரை ஒதுக்கப்படுவதாக பேசப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திடம் பேசிய போது, பாமகவிற்கு நிகராக தங்களுக்கு தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் எங்களுக்கு பூத் கமிட்டி உள்ளது எனவும் கூறியுள்ளார். இதனால் தொகுதி குறைவாக கொடுக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

அப்படி கொடுத்தால் 20 தொகுதிகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஒரு எம்பி சீட்டு வழங்க வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்திள்ளார். இந்நிலையில், 3ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை தொடங்குவதாக இருந்தது.  விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாததால், தேமுதிகவுக்கு அதிக வாக்கு வங்கி கிடைக்காது. ஆகையால், 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதில் அதிருப்தி அடைந்த தேமுதிக இன்று பேச்சுவார்த்தைக்கு வராமலேயே அவர்களது கட்சி அலுவலகத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே, அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. பாமகவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களுக்கு தரவில்லை என தேமுதிக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதனிடையே சசிகலாவுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் குரல் கொடுத்திருந்தது இது ஒரு காரணமாக கருதப்படுகிறது.

அதனால் தான் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்தைக்கு வராமல் அமைச்சர்கள் வந்து எங்களை சந்திக்கிறார்கள் என குற்றசாட்டிக்கின்றனர். இதையடுத்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரச ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு தேமுதிக தாவலாம் என்றும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 mins ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

6 mins ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

40 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

52 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago