தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவா..? விஜயகாந்த் மகனின் பரபரப்பு பேட்டி..!

vijayaprabakaran

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சற்று பின்னடைவாக தான் காணப்படுகிறது. ஆனால், அவர் நலமுடன் உள்ளார். எனவே அவர் 100 வயது வரை நலமுடன் இருப்பார்.

அவர் மீண்டும் எழுந்து நடப்பாரா, பேசுவாரா? என்றால் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கேப்டனின்  தாரக மந்திரம் ‘முடியாது என்பது முட்டாளின் சொல். அதுபோல நாங்கள் முடியாது என்று இல்லை. எங்களால் முடியும் என்ற நமிபிக்கையுடன் தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

அதிமுக மாநாடு என்பது எப்போதும் போல தான் நடந்துள்ளது. எந்த வித்தியாசமும் இல்லை. அதிமுகவுக்குள் யார் பெரியவன் என்ற போட்டி காணப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து கேப்டன் உரிய நேரத்தில் அறிவிப்பார். நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, அணைத்து மாநிலங்களுக்குமானது தான். ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கின்றனர். பொய்யான வாக்குறுதியை திமுகவினர் கொடுத்துள்ளனர். இதனால் மாணவர்கள் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO