ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் : ஓபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என ஓபிஎஸ் பேட்டி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளாக போட்டியிட உள்ளது.
அதன்படி ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு இரு அணிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இரட்டை இலை விவகாரத்தில், நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இதற்கிடையில், இன்று ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பதில்மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.