கொரோனா கட்டுப்பாடு அதிகரிப்பா…? – முதல்வர் ஆலோசனை..!

Default Image

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகம் முழுவதும், இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்ட உயர் மருத்துவ அதிகாரிகள் பங்கேற்ற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெருக்கிறது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் பார்வையாளர்களின்றி நடத்தலாமா? கடைகள் செயல்படும் நேரத்தை குறைப்பது, பொது போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Trump's tariffs full list
trump tariffs
tariffs trump
VIRART INJURY
TN Assembly - M K Stalin
US tariffs