இவைகளுக்கு தடைகள் தொடரும் – தமிழக அரசு .!

Published by
Dinasuvadu desk

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், மேலும் இரண்டு வாரத்திற்கு ஊரடங்குஅதாவது  மே 17 வரை நீடிக்கப்படுகிறது என நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில்,  இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில்,  மே 17 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், கீழ்காணும் செயல்பாடுகளுக்கு  தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இயங்க தடை.
  • வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை.
  • திரையரங்குகள், கேளிக்கை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்கா, அருங்காட்சியகங்கள், நீச்சல் குளம், விளையாட்டு அரங்கு போன்ற இடங்களுக்கு தடை.
  • பொதுமக்களுக்கான விமான, ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்து தடை.
  • டாக்ஸி, ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்ஷா இயங்க தடை.
  • மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.
  • மாநிலங்களுக்கு இடையேயான பொதுமக்கள் போக்குவரத்து.
  • இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது.
  • திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும் என தெரிவித்துள்ளது.
Published by
Dinasuvadu desk

Recent Posts

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

11 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

35 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

1 hour ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago