இவைகளுக்கு தடைகள் தொடரும் – தமிழக அரசு .!
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், மேலும் இரண்டு வாரத்திற்கு ஊரடங்குஅதாவது மே 17 வரை நீடிக்கப்படுகிறது என நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில், மே 17 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், கீழ்காணும் செயல்பாடுகளுக்கு தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இயங்க தடை.
- வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை.
- திரையரங்குகள், கேளிக்கை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்கா, அருங்காட்சியகங்கள், நீச்சல் குளம், விளையாட்டு அரங்கு போன்ற இடங்களுக்கு தடை.
- பொதுமக்களுக்கான விமான, ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்து தடை.
- டாக்ஸி, ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்ஷா இயங்க தடை.
- மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.
- மாநிலங்களுக்கு இடையேயான பொதுமக்கள் போக்குவரத்து.
- இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது.
- திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும் என தெரிவித்துள்ளது.