வருவார்! வருவார்! என்று பல பத்து ஆண்டுகளாக காத்துக் கிடந்தோம்! இப்பொது துணிந்து முடிவு எடுத்துள்ளார் ரஜினி – திருமாவளவன்
வருவார், வருவார் என்று பல பத்து ஆண்டுகளாக காத்துக் கிடந்த நிலையில், இப்போது துணிந்து ஒரு முடிவு எடுத்துள்ளார் ரஜினிகாந்த் என திருமாவளவன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இதுகுறித்து கூறுகையில், வருவார், வருவார் என்று பல பத்து ஆண்டுகளாக காத்துக் கிடந்த நிலையில், இப்போது துணிந்து ஒரு முடிவு எடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
உடல் நலம் கருதி அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்று தகவல் வெளியானபோது அவர் உடல்நிலை முக்கியமானது, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது முதன்மையானது என்று நான் கருத்து கூறியிருந்தேன். இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் கட்சி துவங்க உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளதை, அதை வரவேற்கவும், வாழ்த்தவும் கடமைப்பட்டுள்ளேன். மிக குறுகிய காலத்தில் கட்சியை தொடங்கி ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்று ரஜினிகாந்த் நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளது, நம்பிக்கை என்பதை விட அதீத நம்பிக்கை என்று கூறலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் இது குறித்து கூறுகையில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அரசியலில் இருந்த காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் பெரிய அளவில் இல்லை என்றும் அரசியல் விழிப்புணர்வும் ஒப்பீட்டளவில் இப்போது இருக்கக்கூடிய அளவில் அப்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ரஜினி அரசியலுக்குவருவதற்கு பின்புலமாக பாஜக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள அவர், அரசியல் வேறு ஆன்மீகம் வேறு, இரண்டையும் ஒப்பிடுவது தவறு. பாஜக தான் ஆன்மிகத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.