மத்திய அரசு பொது முடக்க தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து தமிழக அரசும் பொது போக்குவரத்தை தொடங்க அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும், போக்குவரத்து வசதிகளையும் தடை செய்துள்ளது. பஸ்கள் ஓடாததால் பொது மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் 3 ஆம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் உடன் முடிவடையும் நிலையில் நேற்றைய தினம் நான்காம் கட்ட பொது முடக்கத்தில் சில தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அதில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும், இபாஸ் நடைமுறை ரத்து என்றும், திறந்தவெளி திரையரங்குகளுக்கு அனுமதி அளித்தும், மக்கள் மாநிலத்திற்குள் சென்று வர எந்த கட்டுபாடும் விதிக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவை அடுத்து மாநில அரசும் மெட்ரோ சேவைகளை துவங்கவும், இபாஸ் முறையை ரத்து செய்யவும், பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கவும், ஞாயிறன்று விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை ரத்து செய்யவும் ஆகிய தளர்வுகளை அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…