அதிமுக பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் தடை கோரிய வழக்கில் இன்று காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகள் ஈபிஎஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அந்த வகையில்,பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பேனர்களில் ஓபிஎஸ் படங்கள் ஏதும் இடம் பெறவில்லை.மேலும்,பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்களுக்கு QR Code பொருந்திய அடையாள அட்டை தரப்பட்டுள்ளது.
இதனிடையே,அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது இரு தினங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.இந்த விவகாரத்தில்,ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் வாதம் நடைபெற்றது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கின் உத்தரவை ஜூலை காலை 9 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில்,அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளது.ஒரு வேளை பொதுக்குழு நடத்த நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தை நாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், அதிமுக பொதுக்குழுவில் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் அவர்களை நீக்க தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அத்தியாவசியமற்ற செலவுகளை…
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…