காட்டு யானை கொன்ற விவகாரம்.. 56 தங்கும் விடுதிகள் காலவரையின்றி மூடல் !
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவையடுத்து காலவரையின்றி மசினகுடியில் 56 தங்கும் விடுதிகள் மூடப்பட்டது.
கடந்த 4-ஆம் தேதி மாவட்டம் மசினகுடியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் காட்டு யானை மீது எரியும் டயரை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுதும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது.பின்னர் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் யானை நுழைந்த தங்கும் விடுதி வீடு எனது அனுமதி பெற்று அதில் சட்டவிரோதமாக தங்கும் விடுதி நடத்தி வந்தது தெரியவந்தது.
இதனால் மசினகுடியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கும் விடுதிகளை மூட கோரி பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் மூலம் மசினகுடியில் பகுதியில் செயல்படக்கூடிய 56 தங்கும் விடுதிகளுக்கு நோட்டிஸ் ஓன்று அனுப்பப்பட்டது.
அதில், திடீர் சோதனையின் போது உரிய ஆவணம் இல்லாமல் தாக்கும் விடுதி நடத்தினால் உடனடியாக சீல் வைக்கப்படும் என தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, காலவரையின்றி மசினகுடியில் 56 தங்கும் விடுதிகள் மூடப்பட்டது.