காட்டுயானைகள் ஏரியில் குளித்து மகிழ்ந்தன..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சானமாவு போடூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள் வெயிலுக்கு இதமாக அங்குள்ள ஏரியில் குளித்து மகிழ்ந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேன்கனிகோட்டை வனப்பகுதியிலிருந்து ஒசூர் அருகேயுள்ள சானமாவு வனப்பகுதிக்கு 5 காட்டுயானைகள் வந்தன. இதில் ஒரு யானை செட்டிப்பள்ளி வனப்பகுதியிலும், மற்ற 4யானைகள் சானமாவு மற்றும் போடூர் வனப்பகுதியில் சுற்றித் திரிகின்றன.
இந்த நிலையில் சானமாவு போடூர் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 4 காட்டுயானைகள் உணவை தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள நாயக்கனப்பள்ளி கிராமத்திற்கு சென்ற போது கடும் வெயிலின் தாக்கத்திலிருந்து காக்க அங்குள்ள ஏரியில் ஆனந்த குளியல் போட்டன.