கள்ளகாதலுக்காக தன் கணவரை மெரினா பீச்சிற்கு வரவழைத்து கொலை செய்த மனைவி!

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர், நெற்குன்றம் பாடிகுப்பம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி உள்ளது இவரது மனைவியின் பெயர் ஜெயபாரதி. இவரது மனைவி ஜெயபாரதிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இவரகளது கள்ளத்தொடர்புக்கு ஜெயபாரதியின் கணவர் கார்த்தி முட்டுக்கட்டையாக இருப்பது இருவருக்கும் இடைஞ்சலாக இருந்துள்ளது. ஆதலால், ஜெயபாரதி தனது கணவர் கார்த்திக்கை சென்னை மெரினா பீச்சுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஹரி கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் கார்த்திகை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதில் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இந்தச் சம்பவம் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. அப்போது கொலை செய்தவர்களை போலீஸார் மெரினா போலீசார் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். அப்போது, கொலை செய்தவர்களில் இருவர் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால் அவர்களை மட்டும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு அளித்த சென்னை நீதிமன்றம் கார்த்திகை கொன்ற ஜெயபாரதி மற்றும் கிருஷ்ணனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025