சென்னையில் உள்ள வெங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வேலு ஆவார்.இவரது மனைவி ஞானம்மாள்.இவர்களுக்கு குழந்தைகள் உள்ளன.மேலும் வேலு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் வேலு வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாக ஞானம்மாளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஞானம்மாள் கடந்த வியாழன் கிழமை வேலுவிடம் விசாரித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.பின்னர் அது பெரிதாகவே வேலு மனைவி ஞானம்மாள்ளை அடித்துவிட்டு உறங்க சென்றுள்ளார்.பின்னர் சோகத்துடன் ஞானம்மாளும் அவரது குழந்தைகளை அழைத்து கொண்டு உறங்க சென்றுள்ளார்.
மறுநாள் காலை ஞானம்மாள் சீக்கிரமாக எழுந்துள்ளார்.முந்தைய நாள் இரவு நடந்த தகராறை எண்ணியவர் கோபத்தில் கணவர் வேலுவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
பின்னர் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து அங்கு உறங்கி கொண்டிருந்த கணவர் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பாவை பார்த்த குழந்தைகள் ஏங்கி அழுத்துள்ளனர்.
அப்போது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது வேலு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக காவல்துறையினரருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் ஞானம்மாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…