கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி!திடுக்கிடும் தகவல்

Default Image

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியை சேர்ந்த வையம்பட்டி அருகே உள்ள வத்தமணியாபுரம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்.இவர் கல் உடைக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

இவரது மனைவி பஞ்சவர்ணம்.இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளன.இந்நிலையில் இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியையும் பிள்ளைகளையும் அடித்து கொடுமை படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு முருகேசன் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.மேலும் வாக்குவாதம் விரிவடைந்து பெரிய மோதலாக மாற ஆத்திரம் அடைந்த மனைவி பஞ்சவர்ணம் ஊதுகுழலை வைத்து கணவனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மயங்கியபடி கீழே விழுந்துள்ளார் முருகேசன்.உடனே பஞ்சவர்ணம் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் முருகேசனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க ,அவர்கள் வருவதற்குள் பஞ்சவர்ணம் தலைமறைவாகியுள்ளார்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் தப்பி சென்ற மனைவியை வலை வீசி தேடிவருக்கின்றனர்.மேலும் மனைவியே கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியினிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
mk stalin
Santhanam DD Next level trailer
Premalatha Vijayakanth
premalatha vijayakanth
Kolkata FireAccident
Manjolai - TN Govt