கணவர் கண்முன்னே உயிரிழந்த மனைவி.. செங்கல்பட்டில் நேர்ந்த சோக சம்பவம்..!
- கம்ருத்தின்-பாத்திமா என்ற தம்பதிகள், இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.
- செங்கல்பட்டு அருகே நிலைதடுமாறி விழுந்தது இருசக்கர வாகனம். அப்பொழுது பேருந்து ஏறி, கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், சுசுவாஞ்சேரியில் உள்ள பெரிய தெருவை சேர்ந்தவர், கம்ருதின். இவருக்கு திருமணமாகி பாத்திமா கனி என்ற மனைவி உள்ளார். இவர், தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தனர்.
இவர்கள், செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே சென்றபோது இவர்களின் வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. அப்பொழுது தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டை நோக்கி வந்த தனியார் பேருந்து, பாத்திமா மேலே ஏறியது.
கணவர் கண் முன்னே நடந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பாத்திமா உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பாத்திமாவில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.