மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், மனமுடைந்த காவலர் புருஷோத்தமன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடாபுரம் அடுத்த முத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுஜாதா. இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சுஜாதா வயிறு வலியால் அவதியுற்ற நிலையில் அதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் அவரது வயிறு வலி குணமாகாததால், சுஜாதா தனது தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பர்கூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக புருஷோத்தமன் தனது மனைவியான சுஜாதாவை அழைத்து வந்துள்ளார்.
இதனையடுத்து, அவரை பர்கூர் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் தங்க வைத்துவிட்டு, புருசோத்தமன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். மீண்டும் புருஷோத்தமன் வந்து பார்த்தபோது, சுஜாதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து போலீசார் சுஜாதாவின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மனமுடைந்த புருஷோத்தமன் இன்று அதிகாலை திருப்பத்தூர் மாவட்டம் முத்தம்பட்டி பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…