விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் டி.வி. நகரை சேர்ந்த இளைஞர் சேதுபதி ஆவார்.இவர் புதுவையில் உள்ள ஒரு இரு சக்கர வாகன பஞ்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த முருகவேணி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பின்னர் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு கூரை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.இதன் காரணமாக நேற்று மாலை மதுபோதையில் சேதுபதி வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
பின்னர் வீடு முழுவதும் மளமளவென தீப்பிடித்து எறிந்துள்ளது.அப்போது உள்ளே தூங்கி கொண்டிருந்த சேதுபதி பதறி எழுந்து கூச்சலிட்டுள்ளார்.அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பதறி அடித்து ஓடி வந்துள்ளனர்.
அப்போது அங்கு வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.ஆனால் அதற்குள் வீடு முழுவதும் தீப்பரவியுள்ளது.உடனே அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் அடைப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்துள்ளனர்.ஆனால் அதற்குள் சேதுபதி தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.இதனை தொடர்ந்து திண்டிவனம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
பின்னர் சேதுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தீவிபத்து ஏற்பட்டபோது முருகவேணி வீட்டில் இல்லாததை உறுதி செய்த காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது திருமணம் ஆகிய நாளிலிருந்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும் முருகவேணியின் மீது சேதுபதிக்கு சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த முருகவேணி சேதுபதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அப்போது மதுபோதையில் உறங்கிக்கொண்டிருந்த சேதுபதியின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீயை பத்த வைத்து விட்டு வெளியே கதவை மூட்டி சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதனை காரணமாக காவல்துறையினர் முருகவேணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…