தற்கொலைக்கு முயன்ற மனைவி.. தகவலறிந்த கணவரும் தற்கொலை..!

Default Image

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியில் சின்னதண்டா சிஎஸ் காலனியை சேர்ந்தவர் தீபக். 24 வயதாகும் இவர் கொளத்தூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வேதவல்லி என்னும் பெண்ணை நான்கு மாதங்களுக்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.

வழக்கம்போல வேதவல்லி தீபக்கை வேலைக்கு அனுப்பிவிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் அலாரம் சத்தம் கேட்க, அங்கிருந்த அவரின் பெற்றோர் வீட்டிற்குள் ஓடி வந்தனர். அப்பொழுது பார்க்கையில் வேதவல்லி மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அவளின் பெற்றோர்கள், அக்கம்பக்கத்தினரின் உதவியை நாடி, வேதவல்லியே சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மனைவியை தீக்குளித்த சம்பவத்தை அறிந்த தீபக், எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தற்கொலைக்கான காரணம் குறித்து கூறுகையில், வேதவல்லி நீண்ட நாட்களாக தனது சிறுநீரகத்தில் உள்ள கற்களால் பாதிக்கப் பட்டு வந்தார். தற்போது அந்த வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் தற்கொலைக்கு முயற்சித்த தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்