நெல்லை மாநகர காவல் துறை கூடுதல் துணை ஆணையர் வெள்ளதுரை சென்னை தலைமை அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஆவுடையப்பனும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவும் போட்டியிடுகின்றனர். அதேநேரத்தில், நெல்லை மாநகர காவல் துறை கூடுதல் துணை ஆணையர் வெள்ளதுரையின் மனைவி ராணி ரஞ்சிதம் அம்பாசமுத்திரம் தொகுதி அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெள்ளதுரை சென்னை தலைமை அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனைவி போட்டியிடம் தொகுதி உள்ள மாவட்டத்தில் வெள்ளத்துரை பணியாற்றியதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சந்தன கடத்தல் வீரப்பன், திருப்பாசேத்தியில் எஸ்ஐ ஆல்வின் சுதன் கொலை வழக்கில் கைதான ரவுடிகள் பிரபு, பாரதி உள்ளிட்ட என்கவுன்டர் சம்பவங்களை வெள்ளத்துரை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…