மனைவியும் கள்ளகாதலனின் மனைவியும் இணைந்து கணவரை கழுத்தை நெரித்து கொலை!திடுக்கிடும் தகவல்!
சென்னை கோயம்பேட்டையை அடுத்த நெற்குன்றத்தில் உள்ள சக்தி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் ஆவார்.இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் மனைவி காயத்ரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் பிரேத பரிசோதனையில் நாகராஜ் கொலை செய்யப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதன் காரணாமாக வழக்கு தொடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பின்னர் நாகராஜின் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.அதில் காயத்ரிக்கும் நாகராஜனின் நண்பர் மகேந்திரனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
இது நாகராஜுக்கு தெரியவந்துள்ளது.இந்நிலையில் நாகராஜ் காயத்ரியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.பின்னர் மகேந்திரனையும் கொலை செய்து விடுவதாக எச்சரித்துள்ளார்.இந்த தகவல் மகேந்திரனின் மனைவி பானுவிற்கு தெரியவந்துள்ளது.
இதனால் காயத்ரியும் பானுவும் சேர்ந்து நாகராஜை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர்.இதன் அடிப்படையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நாகராஜை துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் தலைவாணியால் முகத்தையும் அளித்தியும் கொலை செய்துள்ளனர் என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் காயத்ரியையும் மகேந்திரனின் மனைவி பானுவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெர்ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.