நெல்லையில் பரவலாக மழை….!!! குற்றால அருவிகளில் குளிக்க தடை….!!!
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மலை பெய்து வருவதால் குற்ரால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பல அணைகள் நிரம்பியுள்ளது. விவசாய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.