கரூர் மாவட்ட புதிய எஸ்.பி.யாக விக்கிரமன் நியமனம் – தமிழக அரசு உத்தரவு
கரூர் மாவட்ட புதிய எஸ்.பி.யாக விக்கிரமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது
தற்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மே 19ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கரூர் மாவட்ட புதிய எஸ்.பி.யாக விக்கிரமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.