543 ரயில் நிலையங்களில் “Wi-Fi” வசதி – தெற்கு ரயில்வே
ரயில் பயணிகளுக்கு இணையதள சேவை வசதிகளை வழங்க ரயில் நிலையங்களில் wi-fi வசதி விரைவில் அறிமுகம்.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் 543 முக்கிய ரயில் நிலையங்களில் wi-fi வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு இணையதள சேவை வசதிகளை வழங்க ரயில் நிலையங்களில் wi-fi அறிமுகப்படுத்த திட்டம் தீட்டி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இதன் மூலம் முதல் அரை மணிநேரத்திற்கு பயணிகள் இலவசமாக wi-fi வசதியை பயன்படுத்தலாம்.
அதன்படி, சென்னை -135, திருச்சி -105, சேலம் – 79, மதுரை – 95, பாலக்காடு – 59, திருவனந்தபுரம் – 70 என மொத்தம் 543 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.தெற்கு ரயில்வே மண்டலத்தில் இதுவரை 5,087 கீ.மீ தூரத்துக்கு கண்ணாயிழை கேபிள் தொடர்பு அமைப்பு என்றும் கூறப்படுகிறது.