தமிழ்நாடு புறக்கணிப்பு., ஒரு வகையில் நிம்மதி.! வீடியோ வெளியிட்ட முதலமைச்சர்.!

Tamilnadu CM MK Stalin

நிதி ஆயோக் : இன்று பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில முதலைமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை.

இது குறித்து முதலமைச்சரின் விளக்க அறிக்கை மற்றும் வீடீயோ வெளியாகியுள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024இல் தமிழகத்திற்கு என்று சிறப்பு திட்டம், நிதி ஒதுக்கீடு செய்யாததன் காரணமாகவே நிதி ஆயோக் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளவில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார் .

அந்த அறிக்கையில், இந்நேரம் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய நான் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) அங்கு செல்லாமல் மக்கள் மன்றம் முன் வந்துள்ள காரணம், அண்மையில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு நீதி கேட்டு இங்கு வந்துள்ளேன். என குறிப்பிட்டு பல்வேறு காரணங்களை கூறினார்.

அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக அரசு நடத்தி வருகிறது. அதற்கு உதாரணம் மத்திய பட்ஜெட் 2024. அதில் பாஜகவை புறக்கணித்த மாநிலங்கள் பழிவாங்கப்பட்டுள்ளன. இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த மக்களை நிதியமைச்சர் பழிவாங்கியுள்ளார். மத்திய அரசு தமிழகத்துக்கு அறிவித்த ஒரே திட்டம் மதுரை எய்ம்ஸ் தான் . அதன் நிலை உங்களுக்கே தெரியும்.

பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தை கூட புறக்கணிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒப்புக்காவது திருக்குறளை வாசித்து பட்ஜெட்டை தொடங்குவார்கள். இந்த முறை திருவள்ளுவரும் கசந்துவிட்டார். இப்படிப்பட்ட பட்ஜெட்டில் திருக்குறள் இடம்பெறாதது ஒரு வகையில் நிம்மதி.

சென்னை மெட்ரோ திட்டம், வெள்ள பாதிப்பு நிதியுதவி ஆகியவை வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் தங்கள் பதவி நாற்காலிக்கு நான்கு கால்களாக இருக்கும் மாநிலங்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வாரி வழங்கி இருக்கிறார்கள்.

வழக்கமாக வழங்கும் “அனைவருக்கும் கல்வி இயக்கம்” திட்டத்திற்கு கூட நிதி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. ஜிஎஸ்டியால் மத்திய தமிழகத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. என பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு இந்திய மக்களின் மனம் கொந்தளிப்பில் உள்ளது. அதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும் என விளக்க அறிக்கை மற்றும் வீடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIve 2 - BJP - TVK
muthu (9) (1)
Natarajan - CSK
Kailash Gahlot
Seeman - DMK
edappadi - vijay
Ragging Death in Gujarat