இங்கு தேர்தல் எதற்கு? தேர்தல் அதிகாரிகள் எதற்கு? – கேப்டன் விஜயகாந்த்

Default Image

நேரடியாக ஆளும்கட்சியே வென்றுவிட்டதாக அறிவிக்க வேண்டியது தானே என கேப்டன் அறிக்கை. 

நேற்று கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி தேமுதிக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகுவிடம் மனு அளிக்கப்பட்டது.

விஜயகாந்த் அறிக்கை

இந்த நிலையில், இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘பணநாயகமே ஜனநாயகமாகிவிட்டதோ? பணத்தை பிரதானப்படுத்தி மக்களை சந்திப்பது சரிதானா? ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் இங்கு தேர்தல் எதற்கு? தேர்தல் அதிகாரிகள் எதற்கு? நேரடியாக ஆளும்கட்சியே வென்றுவிட்டதாக அறிவிக்க வேண்டியது தானே!

இங்கு நியாயமான முறையில் தேர்தலை சந்திக்கும் கட்சிகளின் நிலை என்ன? இனியாவது ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் பெறுவதை மக்களும் தவிர்க்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்