3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் : திமுக ஏன் பதறுகிறது? அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

எதுவாகிலும் அதிமுக சட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்படும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
பின் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலாளர் சீனிவாசனிடம் திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு கொடுத்தார்.இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுக ஏன் பதறுகிறது? என்றும் ஜனநாயக படுகொலைக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர். எதுவாகிலும் அதிமுக சட்டத்திற்கு உட்பட்டுத்தான் செயல்படும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi