தமிழை புறக்கணித்தது ஏன் ? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முதுகலைப் பட்டம் பெற்று இருப்பவர்கள் தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்பிறகு விண்ணப்பிக்கலாம் என்றும் தொல்லியல்துறை,இந்திய வரலாறு மற்றும் இந்திய வரலாறு மற்றும் செம்மொழிகளான சம்ஸ்கிருதம், பிராகிருதம் , அரபு,பாலி மொழிகளில் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய தொல்லியல் துறை அறிவித்தது . ஆகவே மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை என்று தமிழக அரசியல் கட்சினர்,அறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொல்லியல் பட்டயப்படிப்பு கல்வி தகுதியில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.
இதன் பின் மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி மத்திய அரசின் மத்திய தொல்லியல்துறை உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தமிழ், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய தொல்லியில் பட்டயப்படிப்பு விவகாரத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக மதுரையை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் எனவே பழைய அறிவிப்பை ரத்து செய்து செம்மொழி வரிசையில் தமிழை சேர்த்து புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் மனுதாரர் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ,தொல்லியல் துறை பட்டயப் படிப்பு அறிவிப்பாணையில் தமிழ் மொழியைத் தவிர்த்தது ஏன் ? என்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தால் தான் தமிழ்மொழி சேர்க்கப்படுமா ? என்றும் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது.மேலும் வழங்கினை அக்டோபர் 28 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் தொல்லியல் துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…