தமிழக அரசு இராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?
தமிழக அரசு இராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஏற்கனவே சிவகங்கை செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் அடுக்கடுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதாவது சிவகங்கை செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க கோரிய இந்த வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், இந்தியாவின் தென் மூலையில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பது குறித்து மத்திய மாநில அரசுகள் இன்னும் ஏன் ஆலோசனை செய்யவில்லை எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீதிபதிகளின் இந்த கேள்வி ராமேஸ்வரம் பகுதி மக்களுக்கு மகிழ்ச்யை கொடுத்துள்ளது. விரைவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இது குறித்து ஆலோசனை செய்யுமாறும் பதிலளிக்குமாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.