ஏன் சரத்குமார் முதலமைச்சர் ஆக கூடாதா….? ராதிகா சரத்குமார் சரமாரி கேள்வி..!

ராதிகா சரத்குமார் அவர்கள் பேசுகையில், ஏன் சரத்குமார் முதலமைச்சராக கூடாதா? அந்த திறமை அவருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கூட்டத்தில் ராதிகா சரத்குமார் அவர்கள் பேசுகையில், ஏன் சரத்குமார் முதலமைச்சராக கூடாதா? அந்த திறமை அவருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத்குமார், முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி வேண்டும். எனக்கு பிரதமராக கூடிய தகுதி இருக்கிறது. தாடி கூட வைத்துள்ளேன் என்று நக்கலாக தெரிவித்தார். ஒரு சீட்டு இரண்டு சீட்டுகள் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றும், தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்கள் அவரிடம் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சரத்குமார் மக்களுக்காக தான் சட்டங்கள் இருக்க வேண்டும். அவர்கள் வைக்கும் சில கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்வது என்பது தவறு இல்லை என்றும், சட்டத்திலுள்ள பயன்களை எடுத்து விபரமாக விவசாயிகளுக்கு சொல்ல முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025