தமிழக அரசு ஏன் எழுவரையும் விடுவிக்க கூடாது – திருமாவளவன்
கொரோனாவால் சிறையிலிருந்து விடுவிப்பது போல எழுவரையும் தமிழக அரசு ஏன் விடுவிக்க கூடாது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் நளினி மற்றும் முருகன் ஆகிய இருவருக்கும் வெளிநாட்டிலுள்ள உறவினர்களிடம் பேச அனுமதி தரும்படி நளினியின் தாயார் மனு தாக்கல் செய்த நிலையில், சிறைக்கைதிகள் வெளிநாட்டினருடன் பேசலாம் என்ற விதி இல்லை என்பதால் நளினி மற்றும் முருகன் ஆகியோர் வெளிநாட்டு உறவுகளுடன் பேச கூடாது என பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
இதனையடுத்து, இதுகுறித்து கேள்வி எழுப்பிய திருமாவளவன், ‘எழுவரையும் விடுதலை செய்ய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக தான், சிரையிலிருந்து வாட்ஸ் அப் மூலம் கூட உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாதென உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாவால் சிறையிலிருந்து விடுவிப்பது போல எழுவரையும் தமிழக அரசு ஏன் விடுவிக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.